மருத்துவக் கல்வியில் முதுகலை படிப்பு காலம் முடிந்த பின்னரும் முதுகலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவு மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பாக முதுகலை மருத்துவ மாணவர்கள் நேற்று (ஜூன் 1) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முதுகலை மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.