ETV Bharat / state

காவலர் மீது மதுபாட்டில் வீச்சு: வஉசி பேரவையினர் மீது தடியடி! - Chief Minister Edappadi Palanichamy

திருச்சி: சாலை மறியலில் ஈடுபட்ட வஉசி பேரவையினர் காவல்துறையினர் மீது மதுபாட்டில் வீசியதால் தடியடி நடத்தப்பட்டது.

வஉசி பேரவையினர் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர்

author img

By

Published : Dec 9, 2020, 3:11 PM IST

பட்டியலினத்தில் உள்ள ஐந்து சமுதாயத்தினரை பொதுப்பட்டியலில் சேர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அவர் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வஉசி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இன்று (டிச.09) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வஉசி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயர்சித்தனர். ஆனால் அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்தனர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் மல்லுக்கட்டி வாகனத்தில் ஏற்றினர்.

வஉசி பேரவையினர் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர்

இந்நிலையில், வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் மது பாட்டிலை காவல்துறையினர் நோக்கி வீசினார். அது மகளிர் காவலர் ஒருவர் மீது பட்டு சிதறியது.

இதனால் அந்த மகளிர் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதனால் போராட்டக்காரர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பின் அங்கிருந்து தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

தற்போது அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்திய நபர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தண்டவாளத்தை சேதப்படுத்திய பாமகவினர் பிணையில் விடுவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.