ETV Bharat / state

வெள்ளிப்பதக்கம் வென்ற மணிமாறனுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி: ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் மணிமாறனுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

வெள்ளிப்பதக்கம் வென்ற மணிமாறனுக்கு உற்சாக வரவேற்பு
author img

By

Published : Apr 28, 2019, 5:10 PM IST

கடந்த 21ஆம் தேதி 2019ஆம் ஆண்டுக்கான ஆசிய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி ஹாங்காங்கில் துவங்கியது. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறையில் ஓட்டுநராக பணிபுரியும் மணிமாறன் (45) 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.

இதில் இவர் 2ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு முதன்முறையாக மணிமாறன் இன்று திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதிக்கு என் வாழ்த்துக்கள். ஹாங்காங்கில் நான் பெற்ற இந்த வெற்றி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு பெற்ற முதல் வெற்றி. வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான உடற்பயிற்சி கூட நண்பர்களுக்கும், எனது குடும்பத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Intro:பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Body:குறிப்பு : இதற்கான வீடியோ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:
ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் மணிமாறனுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுக்கான ஆசிய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி ஹாங்காங்கில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் 74 கிலோ எடைப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்ட வனத் துறையில் ஓட்டுநராக பணிபுரியும் மணிமாறன் (45) பங்கேற்றார். இவர் பங்கேற்ற பிரிவியில் 2வது இடம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மணிமாறன் தற்போது திருச்சி பொன்மலை கீழே கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பதக்கம் வென்ற பிறகு முதன்முறையாக மணிமாறன் இன்று திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மணிமாறன் நிருபர்களிடம் கூறுகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதிக்கு எனக்கு வாழ்த்துக்கள். ஹாங்காங்கில் நான் பெற்ற இந்த வெற்றியை வெளிநாட்டு பயணங்களில் முதல் வெற்றியாகும். வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான உடற்பயிற்சி கூட நண்பர்களுக்கும், எனது குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு மேற்கொண்டு உதவி புரிந்தால் வரும் செப்டம்பரில் கனடாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று வருவேன் என்றார்.

Conclusion:அரசு உதவி புரிந்தால் கனடாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்வேன் என்று மணிமாறன் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.