ETV Bharat / state

வெகு விமரிசையாக நடைபெற்ற அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்! - சிறப்பு அபிஷேக ஆராதனை

மணப்பாறை அருகே சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

author img

By

Published : Dec 5, 2022, 8:12 AM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் அமைந்துள்ளது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு வழிபாடு 1ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வெகு விமரிசையாக நடைபெற்ற அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.