ETV Bharat / state

அமைச்சர் வளர்மதியின் கார் மீது லாரி  மோதல்: தற்செயலா, சதியா? - கார் மீது மோதிய லாரி

திருச்சி: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வந்த கார் மீது லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

minister valarmathi
அமைச்சர் வளர்மதி கார்
author img

By

Published : Jan 24, 2021, 11:54 PM IST

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சோமரசம்பேட்டை அருகே அல்லிதுறையில் இன்று இரவு (ஜன.24) நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வளர்மதி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் வளர்மதி அரசு காரில், காவல்துறையின் பாதுகாப்பு வாகனத்துடன் வந்தார். அமைச்சர் வளர்மதி காரிலிருந்து இறங்கி பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதியில் பலத்தச் சேதம் ஏற்பட்டது.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்திற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்ற கோண்டத்திலும் விசாரணை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:’தேர்தல் நெருங்குவதால் வேல்கூட குத்துவார்’: ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.