திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாசியப் பொருள்களை விற்பனைச் செய்யும் கடைகளைத் தவிர மற்றவை மூடப்பட்டுள்ளன.
அதன்படி டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டுள்ளன. அதேபோல திருச்சி உறையூர்-குடமுருட்டி சாலை கோணக்கரை சுடுகாடு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை, மார்ச் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களுடன் பூட்டப்பட்டது.
இந்த நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அதன் பணியாளர்களுக்கு தகவல் கிடைத்து. அதையடுத்து டாஸ்மாக் கடை பணியாளர்கள், உறையூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த காவல்துறையினர் சோதனையிட்டதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் வழங்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு: ரகசிய மது விற்பனை... டாஸ்மாக் கடைக்கு சீல்