ETV Bharat / state

குடும்ப கட்டுப்பாடு செய்தும் கர்ப்பம்; அரசு மருத்துவர்கள் மீது பெண் புகார்! - திருச்சி

திருச்சி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தும், தான் கர்ப்பம் அடைந்ததால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

திருச்சி கர்ப்பிணி
author img

By

Published : May 27, 2019, 4:50 PM IST

Updated : May 27, 2019, 4:56 PM IST

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புத்தாநத்தம் மருங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான செல்வராஜ் என்பவரது மனைவி சிட்டம்மாள் (வயது 30) என்பவர் ஒரு மனு அளித்தார். அதில், ”எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

ஆனால் அதன் பின்னர் நான் மீண்டும் கர்ப்பம் அடைந்தேன். அப்போது புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டனர். இதன் பின்னர் நான் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருவை கலைத்துவிட்டேன்.

கர்ப்பமான பெண்

இதன் பின்னர் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளேன். அதனால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Intro:திருச்சி அருகே அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

Body:திருச்சி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்னர் கர்ப்பம் அடைந்ததாக பெண் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் விளக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் மருங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான செல்வராஜ் என்பவரது மனைவி சிட்டம்மாள் (வயது 30) என்பவர் ஒரு மனு அளித்தார். அதில், புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால் அதன் பின்னர் நான் மீண்டும் கர்ப்பம் அடைந்தேன். அப்போது புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தேன். அவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டனர். இதன் பின்னர் நான் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். அப்போது நான் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருவை கலைத்து விட்டேன்.
இதன் பின்னர் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்து உள்ளேன். அதனால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவராசு இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Conclusion:தவறான சிகிச்சை அளித்ததால் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிட்டம்மாள் வலியுறுத்தினார்.
Last Updated : May 27, 2019, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.