திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை சந்தித்து காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "டெல்லியில் விவசாயிகள் மீது நடந்த தாக்குதல்களை கண்டிக்கிறேன். மாதக் கணக்கில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் போராடுபவர்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். விவசாயிகள் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், பாஜக அரசு காட்டு மிராண்டித்தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் ஒரு விவசாயி என பலமுறை கூறுகிறார். ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்களை சந்திக்கவும் இல்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையில் கண்டிப்பாக எங்களுக்கும் திமுகவிற்கும் முரண்பாடு இருக்கும். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அனைத்து விஷயத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல... விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி!