ETV Bharat / state

'அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி போதிமரம் அல்ல!'

திருச்சி: அதிமுகவினர் தியானம் செய்வதற்கு ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதி மரம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
author img

By

Published : Jun 6, 2019, 5:50 PM IST

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் செய்ய திமுக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம், பெயர் மாற்றம் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், அடிப்படை மாற்றம்தான் தேவை என்றும் கூறினார். வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதி மரம் அல்ல; அது ஒரு புதைகுழி என காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும் நீட் தேர்வு கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என திட்டவட்டமாகக் கூறினார்.

அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி போதிமரம் அல்ல - சீமான்

அதேபோல் உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ஊழலில் திளைக்கும் இந்தியாவும், நைஜீரியாவும்தான் இன்னமும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துகின்றன என குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் மோடியின் ஐந்து விரல்களை போல் செயல்படுவதாக அவர் புகார் தெரிவித்தார்.

Intro:திருச்சியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி:
தியானம் செய்வதற்கு ஜெயலலிதா சமாதி போதி மரம் அல்ல என்று சீமான் கூறினார்.
பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தொடர்பான போலி ஆடியோ வெளியீட்டு வழக்கில் நாம் தமிழர் மாவட்ட செயலாளர் அருள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி மத்திய சிறையில் அருளை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது சிறை வாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்ய திமுக முயற்சி செய்கிறது. எங்களை பொறுத்தவரை ஆட்சி மாற்றம், பெயர் மாற்றம் தேவையில்லை. அடிப்படை மாற்றம் தான் தேவை. வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றார்.
ஓ பன்னீர்செல்வமும் அவரது மகனும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தது குறித்த நிருபர்களின் கேள்விக்கு சீமான் பதில் கூறுகையில்,
ஜெயலலிதா சமாதி போதி மரம் அல்ல. அது ஒரு புதைகுழி என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகின்றன. ஆனால் ஊழலில் திளைக்கும் இந்தியாவும், நைஜீரியாவும் தான் இன்னமும் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துகின்றன.
தேர்தல் கமிஷன், சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் மோடியின் ஐந்து விரல்களை போல் செயல்படுகின்றன என்றார்.

Conclusion:ஊழலில் திளைத்த இந்தியாவும் நைஜீரியா வந்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தை தலையில் கட்டிக்கொண்டு அழுகின்றன என்று சீமான் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.