ETV Bharat / state

வேல் யாத்திரை பெயரில் பாஜக ஆன்மிக நாடகம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு - பாஜக ஆன்மீக நாடகம்

திருச்சி: வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக ஆன்மிக நாடகம் ஆடுகிறது என்று மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

jawahirullah comments about vel yatra and amit shah

author img

By

Published : Nov 23, 2020, 6:45 AM IST

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா திருச்சியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், அமித்ஷா சென்னைக்கு வந்து பேசும்போது பாஜக வாரிசு அரசியலை முறியடிக்கும் எனப் பேசுகிறார். இந்தப் பேச்சு நகைச்சுவையாக உள்ளது.

அரசின் செல்வாக்கை பயன்படுத்தி இவரது மகன் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பதவியைப் பெற்றுள்ளார். பாஜகவில் வாரிசுகள் பலர் எம்.எல்.ஏ., எம்.பி ஆக உள்ளனர். பாஜகவினர் பொய் சொல்லி தான் கட்சியை வளர்ப்பார்கள். இதை தான் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தியதாக அமித்ஷா கூறினார். ஆனால் மோடி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வை கொண்டு வந்து அதில் 7.5 சதவீகித இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை குறைத்ததுடன், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி எப்படி படுதோல்வி அடைந்ததோ, அதேபோல வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் அப்படியே செய்வார்கள்.

தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இது வரை ஆளுநர் கையெழுத்து போடவில்லை. உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்யும்படி கூறி உள்ளது.

இந்த வழக்கு 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதற்கு முன்பாக ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் ரீதியான தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். ஆனால் பாஜக வேல் யாத்திரை என்ற பெயரில் ஆன்மிக நாடகம் நடத்துகிறது. இரண்டுக்கும் இடையே வேறுபாடு உண்டு.

அமித்ஷாவின் சித்து விளையாட்டுக்கள் பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் பலிக்கலாம். ஆனால் தமிழகத்தில் பலிக்காது'' என்றார்.

இதையும் படிங்க: வேல்யாத்திரை முடியும் போது திமுகவுக்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்'- பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.