திருச்சி: 15 வார்டுகளை உள்ளடக்கியது திருச்சி லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பேரூராட்சி. இதில், 1ஆவது வார்டில் சுயேட்சை வேட்பாளராக ஜோ. ஆலீஸ் செல்வராணி போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இந்த பேரூராட்சியில் 8 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் சுயேச்சையும் கைப்பற்றியிருந்தனர்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் ஜோ. ஆலீஸ் செல்வராணியும், திமுக கட்சி சார்பில் கோகிலாமுத்துகுமாரும் போட்டியிட்டனர். இதில், சுயேட்சை வேட்பாளர் ஜோ. ஆலீஸ் செல்வராணி 9 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோகிலா முத்துக்குமார் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
கோகிலாவின் கணவர் முத்துக்குமார், கடந்த 15 ஆண்டுகளாக திமுகவின் புள்ளம்பாடி நகர செயலாளராக பதவி வகிக்கிறார். மேலும், தற்போதைய ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது அரசியல் அத்தியாயத்தை புள்ளம்பாடி யூனியன் சேர்மனாகத்தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்!