ETV Bharat / state

பாலியல் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை: திருச்சி ஐஜி ஆபிஸ் முன் உறவினர்கள் மறியல்

பாலியல் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்வதாக, திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை: திருச்சி ஐஜி அலுவலகம் முன் உறவினர்கள் மறியல்

author img

By

Published : Nov 22, 2022, 6:13 PM IST

திருச்சி: தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதியினைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச்சென்று விட்டார்.

இந்நிலையில் அப்பகுதியைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள் இளம்பெண்ணுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், அப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்கள் தான் என அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர் என்றும்;

இதன்காரணமாக மேற்கண்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும் குற்றம் சாட்டி, இளம்பெண்ணின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் அவர்களை ஐஜி அலுவலகத்திற்கு, மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை: திருச்சி ஐஜி அலுவலகம் முன் உறவினர்கள் மறியல்

இதையும் படிங்க: மஹாராஷ்டிராவில் மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை; கணவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.