ETV Bharat / lifestyle

நெஞ்சு சளியை இரண்டே நாளில் கரைக்கும் அற்புத 'இலை'...இப்படி கஷாயம் செய்ங்க! - KARPOORAVALLI FOR COLD AND COUGH

நெஞ்சில் கட்டிருக்கும் சளியை ஒரே நாளில் மலம் வழியே கரைத்து வெளியேற்ற கற்பூரவல்லி இலையை இப்படி கஷாயம் செய்து குடித்து பாருங்கள்.கற்பூரவல்லி இலையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி குணமாகும் என ஆய்வு தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 19, 2024, 4:13 PM IST

தமிழகத்தில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலானோர் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளியால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நெஞ்சு சளியை நீக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக செய்யக்கூடிய கற்பூரவல்லி கஷாயத்தை எப்படி செய்வது? எவ்வாறு குடிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • கற்பூரவல்லி இலை - 4
  • பூண்டு - 1
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 1
  • மிளகு - 10
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி - குட்டி துண்டு
  • தேன் - 1/4 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

கற்பூரவல்லி கஷாயம் செய்முறை:

  • ஒரு மிக்ஸி ஜாரில், அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பின்னர், அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அரைக்கவும்.
  • இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, நாம் அரைத்து வைத்ததை ஊற்றவும். அதனுடன், 1 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கஷாயம் கொதிக்கும் போதே, மஞ்சள் சேர்த்து கலந்து 3 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைக்கவும்.
  • இப்போது, பாத்திரத்தை மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு வைத்து, வடிக்கட்டி எடுத்தால் கஷாயம் ரெடி.

குடிப்பது எப்படி?:

  • இரவு உணவருந்திய 1 மணி நேரத்திற்கு பின் அரை கிளாஸ் கஷாத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும், கஷாயம் குடித்த பின் எதுவும் சாப்பிடக்கூடாது.
  • கஷாயம் காரமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, 1 டீஸ்பூன் கஷாயத்திற்கு 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொடுங்கள்.
  • பெரியவர்கள் அரை கிளாஸ் கஷாயத்திற்கு மேல் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சளியை நீக்கும் கற்பூரவல்லி இலை: வாசம் நிறைந்த மூலிகையான கற்பூரவல்லி இலைகள், சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. கற்பூரவல்லி இலையின் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும் எனவும் இதனை கஷாயம் செய்து குடிக்கும் போது சுவாசப்பாதை தொற்றுகளுக்கு நல்லது என NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கற்பூரவல்லி இலையை வைத்து செய்யக்கூடிய மற்றொரு கஷாயம் செய்முறையையும் NCBI குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு நல்ல மருந்து. மாதத்திற்கு ஒரு முறை கற்பூரல்லி இலைகளை வைத்து கஷாயம் செய்து குடித்து வர சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படாது.

இதையும் படிங்க:

சளி, இருமலை விரட்ட 8 எளிய வீட்டு வைத்தியம்..சித்த மருத்துவர் கூறும் டிப்ஸ் இதோ! - Home remedy for cold and cough

நெஞ்சு சளியை போக்கும் 'மிளகு ரசம்'..இப்படி செஞ்சா சாப்பிட மாட்டீங்க குடிப்பீங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.