ETV Bharat / entertainment

டிசம்பர் விடுமுறை கொண்டாட்டம்: தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்ன தெரியுமா? - TAMIL MOVIE RELEASES

Tamil theatre, OTT releases: இந்த வார இறுதியில் (டிச.20) தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

விடுதலை 2, முஃபாசா போஸ்டர்
விடுதலை 2, முஃபாசா போஸ்டர் (Photo: Film posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 19, 2024, 3:44 PM IST

சென்னை: தமிழ் மொழியில் இந்த மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான 'புஷ்பா 2' தற்போது வரை வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதற்கு பிறகு தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் நாளை பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. அதேபோல் ஓடிடியிலும் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது.

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை(டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது.

விடுதலை 2 போஸ்டர்
விடுதலை 2 போஸ்டர் (Photo: Film posters)

மார்கோ (Marco): ஹனீப் அடேனி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ‘மார்கோ’. இப்படம் பான் இந்தியா அளவில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாளை (டிச.20) வெளியாகிறது. இப்படத்திற்கு கேஜிஎஃப், சலார் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

மார்கோ போஸ்டர்
மார்கோ போஸ்டர் (Photo: Film posters)

முஃபாசா: தி லயன் கிங் (Mufasa: the lion king): உலக அளவில் எதிர்பார்க்கப்படும் முஃபாசா - தி லயன் கிங் திரைப்படம் நாளை (டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முந்தைய பாகம் லயன் கிங் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

முஃபாசா போஸ்டர்
முஃபாசா போஸ்டர் (Photo: Film posters)

யு.ஐ (UI): பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் யுஐ. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை(டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யு.ஐ போஸ்டர்
யு.ஐ போஸ்டர் (Photo: Film posters)

ரைபிள் கிளப் (Rifle Club): ஆஷிக் அபு இயக்கத்தில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது ரைபிள் கிளப். அனுராக் காஷ்யப், திலீஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நாளை (டிச.20) திரையரங்குகளில் வெளியாகிறது. ஆஷிக் அபு முன்னதாக நாரதன், வைரஸ், மாயநதி உள்ளிட்ட மலையாளப் படங்களை இயக்கியுள்ளார்.

ரைபிள் கிளப் போஸ்டர்
ரைபிள் கிளப் போஸ்டர் (Photo: Film posters)

ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள்

நிறங்கள் மூன்று: கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வா, ரகுமான் உள்ளிட்டோர் நடித்த ’நிறங்கள் மூன்று’ திரைப்படம் நாளை (டிச.20) Aha ஓடிடியில் வெளியாகிறது. முன்னதாக நிறங்கள் மூன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிறங்கள் மூன்று போஸ்டர்
நிறங்கள் மூன்று போஸ்டர் (Photo: Film posters)

இதையும் படிங்க: ’இந்தியன் 2’ நெகடிவ் விமர்சனங்கள்... மனம் திறந்த இயக்குநர் ஷங்கர்! - SHANKAR ABOUT INDIAN 2 REVIEWS

சாமானியன்: பிரபல நடிகர் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'சாமானியன்'. இப்படத்தை ராகேஷ் இயக்கியுள்ளார். சாமானியன் திரைப்படம் நாளை tentkotta ஓடிடியில் வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.