பாலை கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து அளவை குறித்துக் கொடுத்திடுக!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேரணியாக வந்து கலந்துகொண்டனர். இதில், ஆவின் நிர்வாகம் பாலை கொள்முதல் செய்கின்ற ஆரம்ப சங்கங்களிலேயே சத்து அளவை குறித்துக் கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் முன்னிறுத்தப்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,
- சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்,
- ஆவின்பால் கொள்முதல் தினசரி 50 லட்சம் லிட்டராக உயர்த்திட வேண்டும்,
- கால்நடை தீவனம் 50 விழுக்காடு மானியத்தில் வழங்க வேண்டும்,
- சத்துணவுத் திட்டத்தில் ஆவின்பால் சேர்த்து வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.