ETV Bharat / state

மகாத்மாவின் கனவை நிறைவேற்றுகிறதா? தூய்மை இந்தியா திட்டம்...! - தூய்மை இந்தியா திட்டம்

மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் இச்சமயத்தில் கிராமங்களில் தனி நபர் கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவரது கனவுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

மாகாத்மாவின் கனவை நிறைவேற்றுகிறதா? தூய்மை இந்தியா திட்டம்..!

author img

By

Published : Aug 4, 2020, 2:51 PM IST

சுத்தம், சுகாதாரத்தை மிகவும் விரும்பிய மாகாத்மா காந்தி, நாட்டின் வளர்ச்சி கிராமங்களில்தான் உள்ளது என நம்பினார். இதனை செயல்படுத்தும் விதமாக தூய்மை இந்தியா திட்டம் பிரதமர் மோடியால் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கி 2019ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அதிகமான கழிப்பறைகளைக் கட்டி, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடு என 'இந்தியா' அறிவிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க வேண்டும் என்பது நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. அவரது 151ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள தற்போதைய சூழ்நிலையில் திறந்தவெளி கழிப்பிடங்கள் முற்றிலும் ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் மூலம் ஆற்றங்கரை ஓரம், ரயில் தண்டவாள ஓரம் என ஒரு சில பகுதிகளைத் தவிர, பல பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்பதை நாம் பெருமையுடன் கூறிக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அரசு அலுவலர்களின் அலட்சியம், முறைகேடு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களால் ஒரு சில பகுதிகளில் பொது கழிப்பிடம் இருந்தும் அதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கிராம மக்கள் மத்தியில் கட்டண அடிப்படையிலான பொது கழிப்பிடங்கள் போதுமான வரவேற்பு இல்லை. இதன் காரணமாக திறந்தவெளி கழிப்பிடங்களை ஒரு சில கிராமங்களில் மட்டும் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் கிராமங்களின் தனி நபர் கழிப்பிடம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக அரசு மானியத்துடன், கிராம மக்களின் பங்களிப்புடனும் தனி நபர் கழிப்பிடம் கட்டும் திட்டம் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 8 ஆயிரம், ரூ. 12 ஆயிரம் என்று வளர்ந்து, தற்போது குளியலறையுடன் கூடிய தனி நபர் கழிப்பிடம் ரூ. 18 ஆயிரம் மானியத்துடன் கட்டப்பட்டு வருகின்றது.

இத்தகைய கழிப்பிடம் கட்டிக் கொடுக்கும் சமுதாயப் பணியை திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிராமாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. 1987ஆம் ஆண்டு முதல் செயல்படும் இந்த அமைப்பு தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.

பொது கழிப்பிடம் என்பது வெளியூர் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் அமைக்கப்படுவதாகும். ஆனால், இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட குடிசைப் பகுதிகளை தேர்வு செய்து அங்கு சமுதாய பொது கழிப்பிடங்களை அமைத்துள்ளது. இவ்வாறு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கட்டப்படும் கழிப்பிடங்களை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்களை கொண்ட ஒரு குழு அமைத்து கழிப்பிடங்களை பராமரித்து வருகிறது.

இந்த வகையில் திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளில் சமுதாய கழிப்பிடம், பொது கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகள் கழிப்பிடம் என மொத்தம் 430 கழிப்பிடங்கள் உள்ளன. இதில் 250 கழிப்பிடங்கள் கிராமாலயாவின் குழுவினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதை பயன்படுத்தும் அப்பகுதி மக்களிடம் 2 ரூபாய் கட்டணம் வசூலித்து பராமரிப்பு, பழுது நீக்குதல், சம்பளம் போன்றவைக்கு பயன்படுத்தப்படுகிறது. நகர் புறத்தில் உள்ள இந்த குழுக்களுக்கு ஷீ என்று பெயரிப்பட்டுள்ளது. ( she-சானிடேஷன், ஹைஜீன், எஜூகேஷன் ஆகியவை இதன் பொருள் அடக்கமாகும்).

இதேபோல் கிராமப்புறங்களில் தனி நபர் கழிப்பிடங்கள் வீடுகள் தோறும் அமைக்க ‘வாஷ்மேன்’ (washman-வாட்டர், சானிடேஷன், ஹைஜீன், மென்சூரல் ஹைஜீன், மேலாண்மை, நியூட்ரிஷன்) என்ற 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருப்பார்கள். இந்த குழு தான் பயனாளிகளை தேர்வு செய்து, கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கும்.

இதற்கான முழு நிதியும் சம்மந்தப்பப்பட்ட குழு தலைவயின் வங்கி கணக்கில் கிராமாலயா சார்பில் செலுத்தப்படும். முழுக்க முழுக்க கிராமாலயாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த குழுவினரே தனி நபர் கழிப்பிடங்களை கட்டிக் கொடுக்கின்றனர். 6 மாநிலங்களிலும் இத்தயை குழுக்கள் 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றும் குழுவுக்கு பயிற்சியோடு, விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருச்சி மாவட்டம் முசிறி சாலியர் தெருவின் நெசவாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிகவும் பின்தங்கிய இந்த பகுதியில் மட்டும் கிராமாலயா முயற்சியால் 201 தனி நபர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎப்சி நிறுவனர் ஹெச்டி பாரேக் அறக்கட்டளை சார்பில் ரூ. 2.15 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள 100 பொது கழிப்பிடங்கள் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோல் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் உள்பட 15 கார்ப்பரேட் நிறுவனங்கள் அதன் சமுதாய பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் கிராமாலயா மூலம் கழிப்பிடம், சுகாதாரம் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. கிராமாலயாவின் வெளிப்படையான நிர்வாகத் தன்மையால் இந்த நிறுவனங்கள் ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்து வருவது சிறப்பம்சமாகும் என்று அதன் நிர்வாக இயக்குநர் இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் இளங்கோவன் கூறுகையில், ”6 மாநிலங்களிலும் இதுவரை சமுதாய கழிப்பிடம், தனி நபர் கழிப்பிடம், பள்ளி கழிப்பிடம் என 6 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் கழிப்பிடம் என்று கூறப்படும் குளியலறையுடன் கூடிய கழிப்பிடம் மட்டும் 2 லட்சம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் 35 ஆயிரம் ஸ்மார்ட் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கழிப்பிடம் கட்ட ரூ.18 ஆயிரம் செலவாகும். இதில் அரசு மானியம் ரூ. 12 ஆயிரம். ஆனால் புதுச்சேரியில் நபார்டு மூலம் மேலும் 8 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் என்னதான் தனி நபர் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுத்தாலும், அதை 60 முதல் 65 விழுக்காடு பேர் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் கிராமாலயா சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கழிப்பிட பயன்பாடு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராம பெண்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வு பயிற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. இதேபோல் கிராமப் புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 200 பள்ளிகளில் கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பெண்கள் பயிலும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் வசதியுடன் கூடிய கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கிராமாலயா சார்பில் கழிப்பிடம் கட்டுவது தொடர்பாக திருச்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, “கழிப்பறைகள் கட்டுவது குறித்த பயிற்சி அளிக்கும் மையம் திருச்சி மாவட்டம் முசிறி கொளக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழிப்பிட நிர்வாக குழுக்களின் நிர்வாகிகள் இங்கு வந்து பயிற்சி பெற்றுச்சென்றுள்ளனர்.

மாகாத்மாவின் கனவை நிறைவேற்றுகிறதா? தூய்மை இந்தியா திட்டம்..!

மேலும் இங்கு இரு மலக்குழி, செப்டிக் டேங்க், சுற்றுசூழல் மேம்படுத்தும் சுகாதார கழிப்பிடம், உயிரி எரியூட்டும் கழிப்பிடம், குழந்தை நேய கழிப்பிடம், சான எரிவாயு கழிப்பிடம், சமுதாய கழிப்பிடம் உள்ளிட்ட 30 வகையான கழிப்பிடம், கழிவு தொட்டி, கழிப்பிட இருக்கை ஆகியவற்றின் மாதிரிகள் இங்கு காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள களிமண், ஆற்று மணல் பகுதி, கடற்கரை பகுதி போன்றவற்றுக்கு ஏற்படுத்தக் கூடிய கழிவு தொட்டிகளின் மாதிரிகளும் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியின் போது கழிப்பிடம் கட்டப்படும் முறை, கழிவுகள் வெளியேற்றும் முறை ஆகியவற்றிற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க:'ஜோக்கர்' பட பாணியில் நாமக்கல்லில் பல லட்ச ரூபாய் முறைகேடு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.