ETV Bharat / state

"இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை" - ஹரிஷ் கல்யாண்! - cinema news

Harish Kalyan: பார்க்கிங் பட புரமோஷனுக்காக திருச்சி வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

Harish Kalyan
ஹரிஷ் கல்யாண்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 5:27 PM IST

திருச்சி: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங். இந்த படத்தை பாஷன் ஸ்டூடியோஸ் ( passion studios) நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இளவரசு, பிரதான நாதன், ராமா எனப் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாரிஸ் திரையரங்கில் இன்று பார்க்கிங் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் படத்தின் புரமோஷனுக்காக திருச்சிக்கு வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து ஹரிஷ் கல்யாண் பேசுகையில், "இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக, சாதாரணமாக நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த படம். ஒவ்வொரு மனிதனிடமும் ஈகோ பிரச்னை இருக்கும்.

அதன் வெளிப்பாடு, அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து விரிவானது இந்த படம். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவு தர வேண்டும். எந்த இயக்குநருடன் படம் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் குறித்த கேள்விக்கு, இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன்.

பிக் பாஸ்: பிக் பாஸ் குறித்த கேள்விக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரச்னையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் எனப் பிரிக்கப்பட்டு அதில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு இடையே பல பிரச்னைகள் நிலவி வருகிறது.

நான் போட்டியாளராக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், இந்த நிகழ்ச்சிக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல மிஸ் கம்யூனிகேஷன் இருப்பதாக எனக்கு தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொருத்தவரை அர்ச்சனா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அதே போன்று, இன்னும் சிலர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் தான் நான் எனது படம் புரமோஷனுக்காக சென்றேன் மற்றபடி வேற எந்த காரணமும் இல்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி: பட்டினப்பாக்கம் மீனவ கிராமத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.