ETV Bharat / state

திருச்சியில் கைத்தறி கண்காட்சி விழா தொடக்கம்!

திருச்சி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்சி சரகம் சார்பில் கைத்தறி கண்காட்சி தொடக்கவிழா இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது.

trichy handloom exhibition  திருச்சியில் கைத்தறி கண்காட்சி விழா தொடக்கம்  கைத்தறி கண்காட்சி விழா  கைத்தறி மற்றும் துணிநூல் துறை  Handloom Exhibition Festival begins in Trichy  Handloom Exhibition Festival  Handloom Exhibition Ceremony  Handloom and Textile Department  கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் சூர்யா  Surya, Assistant Director, Department of Handloom and Textiles
Handloom Exhibition Ceremony
author img

By

Published : Dec 29, 2020, 4:40 PM IST

திருச்சி மாவட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்சி சரகம் சார்பில், கைத்தறி கண்காட்சி தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். இவ்விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை திருச்சி சரக (கூடுதல் பொறுப்பு) உதவி இயக்குநர் சூர்யா, சேலம் மாவட்ட நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி நடைபெறும் நேரம்

அப்போது, உதவி இயக்குநர் சூர்யா செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையுடன் இணைந்து இந்த கண்காட்சியை ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியில் விற்பனை நடைபெறும்.

தள்ளுபடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இக்கண்காட்சியில் அனைத்து ரக ஜவுளிகளுக்கும் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர பட்டுப் புடவைகளுக்கு 45 முதல் 55 விழுக்காடு வரை ரகத்திற்கேற்றவாறு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. பட்டு சேலைகள், பட்டு வேஷ்டி, பெட்ஷீட், போர்வைகள், தலையணை உறைகள், அலங்கார விரிப்புகள், ஜமக்காளம், பருத்தி சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், பாலியஸ்டர் சேலைகள், திரைச்சீலைகள், துண்டுகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அனுமதி இலவசம்

இதற்கான அனுமதி இலவசமாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சரகங்களில் 750 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில், திருச்சியில் மட்டும் 11 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 72 கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு ரூ.50 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: வர்த்தகம் மற்றும் தொழில் துறை கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.