ETV Bharat / state

துப்பாக்கி தொழிற்சாலையில் புதிய கையெறி குண்டு லாஞ்சர் அறிமுகம் - trichy district news in tamil

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் புதிதாக கையெறி குண்டு லாஞ்சர் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

hand-thrown-bomb-launcher-indroduced-in-tiruchy-oft
துப்பாக்கி தொழிற்சாலையில் புதிய கையெறி குண்டு லாஞ்சர் அறிமுகம்
author img

By

Published : Aug 4, 2021, 4:29 AM IST

திருச்சி: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ராணுவம், காவல் துறைக்கு தேவையான நவீன ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இங்கு உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் பல்வேறு வகை புதிய ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய கையெறி குண்டு லாஞ்சர்

தற்பொழுது 40 ×46 மில்லி மீட்டர் அளவில் யுபிஜிஎல் எனும் நவீன கையெறி குண்டு லாஞ்சர் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, ஏகே - 47 ரக துப்பாக்கிகளுடன் இணைக்கக் கூடிய வசதியை பெற்றுள்ளது. இதனை 400 மீட்டர் தூரம் வரை பயன்படுத்த முடியும். இதனுடைய எடை 1.6 கிலோ கிராம்.

Hand thrown bomb launcher indroduced in tiruchy oft
லாஞ்சர்

இந்த ஆயுதம் ஒரு ஒற்றை சாட், பிரீச் லோடிங் லாஞ்சர் ஆகும். பல்வேறு வகை கையெறி குண்டுகளை பயன்படுத்துவதன் மூலம் இதன் சக்தியை அதிகரிக்க முடியும்.

ஏகே - 47 மற்றும் யுபிஜிஎல் லாஞ்சர்

சிறப்பம்சம் என்ன?

ஒரு சிப்பாய் டார் ஏகே- 47 தோட்டாவை பயன்படுத்துவதன் மூலமும், கையெறி குண்டுகளை வீசுவதன் மூலமும், எதிரிப் படையினரை அழிக்கவும், முன்னேறாமல் தடுக்கவும் முடியும். இந்த ஆயுதத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் டார் ஏகே- 47 துப்பாக்கியுடன் இணைக்கவும், பிரிக்கவும் முடியும்.

Hand thrown bomb launcher introduced in trichy
லாஞ்சர் அறிமுகம்

இந்த ரக ஆயுதமானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், காலாட்படை, சிறப்பு படையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான போர்முறைகள் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த ஆயுதத்தினை பொது மேலாளர் சஞ்சய் திவேதி ஆலையில் உள் பகுதியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தினார். விழாவில் கூடுதல் பொது மேலாளர் ராஜேஷ், ஏ.கே.சிங், இணை பொது மேலாளர்கள் குணசேகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் மாவட்டத்தில் 136 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.