திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மக்களுக்காக குறைதீர்நாள் கூட்டம் நடப்பது வழக்கம். கரோனா காலங்களில் தடைபட்டிருந்த இந்நிகழ்வு தற்போது மீண்டும் அனைத்து மாவட்டங்களும் நடைபெற்ற வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் மாநகராட்சி மேயர்களும் திங்கட்கிழமை தோறும் மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் மாமன்ற மேயரும் ஒரே நாளில் மனு பெறுவதால் இங்கே செல்வதா அங்கே செல்வதா என மக்களிடையே பெரும் குழுப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நாளை (மே 23) திங்கட்கிழமை மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணத்தால் அன்று நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த மக்கள் கிழமையை மாற்றி அமைத்து அதனையே தொடர்ந்து நடைமுறைப் படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு நாளும், மேயரிடம் ஒரு நாளும் சென்று மனு கொடுக்க ஏதுவாக இருக்கும் எனவும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போல முதலமைச்சரின் செயல்கள் உள்ளன - அண்ணாமலை கிண்டல் பேச்சு!