சென்னை: Holiday for Pongal: பொங்கலுக்கு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறை அறிவிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022, தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
ஜனவரி 17ஆம் தேதியும் அரசு விடுமுறை
அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து , 18.01.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும் , இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக 29.01.2022 (சனிக்கிழமை ) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடுகிறது.
அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்டப் பணியாளர்களோடு செயல்படுவதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Rain: டெல்டா, தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை