திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் மாவட்ட தலைவர் யோகராஜ் தலைமை வகித்தார்.
ஆசிரியர்கள் லியோ லாரன்ஸ், நாகலட்சுமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்க்க வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை முன்புபோல மாற்றி அமைத்திட வேண்டும், நியமன அலுவலர் அனுமதியுடன் உயர்கல்வி பயின்ற அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு குழு: சீர்மரபினர் நல சங்கம் சார்பில் மனு