ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்! - திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்

author img

By

Published : Nov 16, 2022, 1:20 PM IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் பறிமுதல் குறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11 25 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சிங்கப்பூரை சேர்ந்த நடராஜன் 53 என்பவர் தனது உடலில் மறைத்து ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான 309 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதன் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியராஜ் 38 என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து ரூபாய் 16.45 லட்சம் மதிப்பிலான 362 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்
திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்

அவற்றை பறிமுதல் செய்டஹ் அதிகாரிகள் பாக்கியராஜை கைது செய்தனர். மேலும், அதே விமானத்தில் பயணம் செய்த அரியலூரை சேர்ந்த ரங்கசாமி 36 என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான 363 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.