ETV Bharat / state

'தன் கையே தனக்கு உதவி' - ஐலேசா ஐலசா வேகமா தள்ளு ஐலேசா! - girls pull their car \

திருச்சி: மணப்பாறையில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது சாலையின் நடுவே பழுதாகி நின்ற தங்களது காரை இரண்டு பெண்கள் இறங்கி நனைந்துகொண்டே தள்ளிச் சென்றனர்.

காரை மீட்டெடுத்த இளம்பெண்கள்
author img

By

Published : Sep 12, 2019, 7:58 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் இன்று மாலை முதல் காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் செல்ல போதிய அளவு வழிவகை இல்லாததால் பேருந்து நிலையத்தின் முன்புறச் சாலையில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

காரை மீட்டெடுத்த இளம்பெண்கள்

இந்நிலையில், அவ்வழியே சென்ற காரை தண்ணீர் சூழ்ந்ததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. காரில் இருந்தவர்களுக்கு உதவ யாரும் முன்வராத நிலையில் அதிலிருந்த இரண்டு பெண்கள் மழையில் நனைந்தவாறு தங்களது காரை தாங்களே தள்ளிச் சென்றனர்.

Intro:தன் கையே தனக்கு உதவி பாணியில் - காரை மீட்டெடுத்த இளம் பெண்கள்.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை முதல் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது. கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் செல்ல போதிய அளவு வழிவகை இல்லாததால் பேருந்து நிலையத்தின் முன்புற சாலையில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சி அளித்தது. இந்நிலையில் அவ்வழியே சென்ற கார் ஒன்று தண்ணீர் சூழ்ந்ததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. காரில் இருந்தவர்களுக்கு பொது மக்கள் யாரும் உதவிக்கு வராத நிலையில் காரில் இருந்த இரு பெண்கள் தாங்களே இறங்கி வந்து காரைத் தள்ளிச் சென்றனர்.

மேலும் இது போன்று பேருந்து நிலையம் முன்புற சாலையில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.