ETV Bharat / state

காந்தி மார்கெட்டை அழிக்கக்கூடாது - அரசுக்கு வியாபாரிகள் வேண்டுகோள்! - காந்திமார்க்கெட் இடமாற்றத்துக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

திருச்சி :  காந்தி மார்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று காந்தி சிலையிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

gandhi_market_issue
author img

By

Published : Oct 2, 2019, 9:15 PM IST

திருச்சியில் 150 ஆண்டுகளாக காந்தி மார்கெட் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இங்கு தினமும் வியாபாரம் செய்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களுக்கு முக்கிய சந்தையாக இந்த காந்தி மார்கெட் விளங்குகிறது. இதனை திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த மார்கெட் உருவாக்கப்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்து மார்கெட் செயல்படத் தயாராக உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டுமான பணி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் புதிய மார்கெட் மூடியே கிடக்கிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் இன்று மார்கெட் வளாகத்தில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

காந்தி மார்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் மனு அளிக்கும் போராட்டம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், 150 ஆண்டுகளாக செயல்படும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வற்புறுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக காந்தி மார்கெட் இடமாற்றம் செய்வதாக கூறுகின்றனர்.

மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் காய்கறி கடைகள் கிடையாது. மளிகை மண்டிகள், லாரி ஷெட்கள், பகல் நேரத்தில் லாரிகளுக்கு உள்ளே வர அனுமதிப்பது போன்ற காரணங்கள்தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம். பழமைகளை பாதுகாக்கும் அரசு 150 ஆண்டுகால காந்தி மார்கெட்டை இடமாற்றம் செய்யாமல் சீரமைத்து கொடுக்கவேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை காரணம் காட்டி காந்தி மார்கெட்டை அழிக்க முயற்சிக்கக்கூடாது என்று கூறினார்.

இதையும் படிங்க:

சிபிசிஐடியினருக்கு தண்ணி காட்டி வந்த முக்கிய குற்றவாளி போபாலில் கைது!

Intro:திருச்சியில் செயல்படும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று காந்தி சிலையிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:திருச்சி:
திருச்சியில் 150 ஆண்டுகளாக செயல்படும் காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலையிடம் மனு அளித்தனர்.
திருச்சியில் 150 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இங்கு தினமும் வியாபாரம் செய்து வருகின்றனர். திருச்சி மாநகரம், திருச்சி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கும் முக்கிய சந்தையாக இந்த காந்தி மார்க்கெட் விளங்குகிறது. இந்த காந்தி மார்க்கெட்டை திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்ய மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த மார்க்கெட் உருவாக்கப்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்து மார்க்கெட் செயல்படத் தயாராக உள்ள நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டுமான பணி முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் புதிய மார்க்கெட் மூடியே கிடக்கிறது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் இன்று மார்க்கெட் வளாகத்தில் உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது கமலக்கண்ணன் செய்தியாளரிடம் கூறுகையில்,
150 ஆண்டுகளாக செயல்படும் காந்தி மார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் வற்புறுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்வதாக கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் காய்கறி கடைகள் கிடையாது. மளிகை மண்டிகள், லாரி ஷெட்கள், பகல் நேரத்தில் லாரிகளுக்கு உள்ளே வர அனுமதிப்பது போன்ற காரணங்கள்தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.
சோதனை சாவடிகளில் போலீசார் பணம் வாங்கிக்கொண்டு பகல் நேரத்தில் லாரிகளை மார்க்கெட்டிற்குள் அனுமதிக்கின்றனர். அதேபோல் காந்தி மார்க்கெட்டை சுற்றி தரைக்கடை அமைக்கவும், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யவும் போலீசார் அனுமதிக்கின்றனர். இது போன்றவற்றை தவிர்த்தாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.
அதோடு காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள நான்கு சாலைகளையும் சீரமைத்து, இருவழி சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதியில் முறையான பஸ் நிறுத்தம் இல்லை. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். புதிதாக ஒருவர் காந்தி மார்க்கெட்டிற்கு வந்தால் பஸ் நிறுத்தத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். பழமைகளை பாதுகாக்கும் அரசு 150 ஆண்டுகால காந்தி மார்க்கெட்டை இட மாற்றம் செய்யாமல் சீரமைத்து கொடுக்கவேண்டும். நகரில் மகளிர் சிறைச்சாலை, பழைய பால்பண்ணை, அரியமங்கலம் குப்பைக்கிடங்கு, மதுரம மைதானம் போன்று வீணாக கிடக்கும் இடங்கள் உள்ளன. அந்த பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி சட்டத்தை காரணத்தை காட்டி காந்தி மார்க்கெட் அழிக்க முயற்சிக்கக்கூடாது என்றார். சங்க பொருளாளர் சபீர் அகமது கூறுகையில், எங்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் செவிசாய்க்கவில்லை. அதனால் காந்தி சிலையிடம் இன்று மனு கொடுத்தோம். பழமையான மார்க்கெட்டை அழித்து ஸ்மார்ட்சிட்டி உருவாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி அமைக்க வேறு இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

Conclusion:காந்தி மார்க்கெட்டை அழித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கைவிட வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.