ETV Bharat / state

ஜி கார்னர் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு தடை

author img

By

Published : May 4, 2020, 9:17 AM IST

திருச்சி: பொன்மலை ஜி -கார்னர் மைதானத்தில் செயல்படும் சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே மொத்த வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும், இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சிவராசு எச்சரித்துள்ளார்.

collector sivarasu
collector sivarasu

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் கூடியதால், திருச்சி மாநகரில் உள்ள 11 இடங்களில் தற்காலிக சந்தைகள் திறக்கப்பட்டன. அதன்படி, காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த வியாபாரக் கடைகள், பொன்மலை ஜீ கார்னர் ரயில்வே மைதானத்திற்கு மாற்றப்பட்டு இரவு 9 மணி முதல் மறுநாள்காலை 6 மணி வரை மொத்த வியாபாரம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு சில்லரை வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பலருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது தெரியவந்ததையடுத்து பொன்மலை ஜீ கார்னர் மார்க்கெட்டிலும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"திருச்சி பொன்மலை ஜி-கார்னர் காய்கறி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே நேற்று (3ம் தேதி) இரவு முதல் விற்பனை செய்யப்படும். பொது மக்களுக்கு விற்பனை இல்லை, என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரம் நடைபெறும் போது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் மற்றும் அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். காய்கறி மொத்த வியாபாரம் நடைபெறும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்தும், விற்பனை செய்ய வேண்டுமென்று வியாபாரிகளுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும் அதனை கடைபிடிக்காமல் உள்ளனர். மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்வது நிறுத்தப்படுகிறது. சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே மொத்த வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்வது என்று மொத்தவியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதனை மீறும் மொத்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மீது காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வூகான் ஆகிறதா கோயம்பேடு... தவறு எங்கே நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.