ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த முருகன், சாந்தனு, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி உட்பட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் மற்றும் சாந்தன் இருவரையும் காவல் துறையினர் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்தனர். இதேபோல் விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்கள் வெளிநாட்டு நாட்டினர் என்பதால், இவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு வருவதைத்தொடர்ந்து மத்திய சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சாதாரண மனிதராக எனது மகள், கணவருடன் வாழ விரும்புகிறேன் - நளினி