ETV Bharat / state

2026இல் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும்.. காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் ஜெயக்குமார் சூளுரை! - திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '2026ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும். அதிமுக மீது பொய் வழக்குகள் போட்டு அழித்துவிடலாம்; ஒழித்துவிடலாம் என்பது பூனை பகல் கனவு கண்டது போல் இருக்கிறது. பொய் வழக்குப் போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது ஒரு போதும் நடக்காது' என்றார்.

ADMK ex minister Jayakumar signed at Trichy Cantonment police station  2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும், காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் ஜெயக்குமார் சூளுரை

author img

By

Published : Mar 14, 2022, 3:39 PM IST

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக பிரமுகரைத் தாக்கி சட்டையைக் கழற்றி அழைத்து வந்தது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் (சட்டம் ஒழுங்கு) காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேரன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2021 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதிமுகவுக்கும் 3% மட்டுமே வாக்கு வித்தியாசம். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும். 2026ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும்.

அதிமுக மீது பொய் வழக்குகள் போட்டு அழித்துவிடலாம்; ஒழித்துவிடலாம் என்பது பூனை பகல் கனவு கண்டதுபோல் இருக்கிறது. இந்தப் பகல் கனவு பலிக்காது. அதிமுக முன்னோடிகள் மீது பொய் வழக்குப்போட்டு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைப்பது ஒரு போதும் நடக்காது" என்றார்.

2026இல் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும்.. காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் ஜெயக்குமார் சூளுரை...

தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது,

இதற்கு நையாண்டியாக சந்திரபாபு பாடலான சிரிப்பு வருது... சிரிப்பு வருது என்ற பாடலைப் பாடிக் காண்பித்து, ''ஊருக்குத்தான் உபதேசம். அவரே ஒத்துக்கொள்கிறார். தொண்டர்களை அல்ல; குண்டர்களைக் கொண்ட நிலை கொண்ட கட்சி திமுக என முதலமைச்சர் ஒத்துக்கொண்டு விட்டார்.

சமூக விரோதிகள் பல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினர். வழிப்பறிக் கொள்ளைகள் என அனைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருந்தால்தான் திமுகவில் சேர அடிப்படைத் தகுதி என முதலமைச்சரே சர்டிபிகேட் கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்' எனப் பதிலளித்தார்.

அதிமுகவில ஒற்றைத் தலைமை என்பது தவறான கருத்து. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இருபக்க நாணயம் போன்றது. ஒரு தோல்வியை வைத்து கட்சி எடை போட முடியாது. கட்சி கட்டுப்பாட்டை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ்ஸின் சகோதரரே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். போஸ்டர் ஒட்டுவது இதுபோன்ற செயலில் ஈடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) திருச்சியிலேயே தங்கியிருந்து கையெழுத்திட நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 20 நாள் சிறை வாசத்திற்கு பின் ஜெயக்குமார் விடுதலை: உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள்...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.