திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டர் வேலை செய்துவருகிறார். இருவருக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன.
இவருக்கு குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக, இவர் மனைவியின் உறவினர் ஒருவரின் மகளை தந்தெடுத்து இவரும் இவரின் மனையும் வளர்த்துவந்தனர். அந்தச் சிறுமிக்கு தற்போது 10 வயது ஆகிறது. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில் அச்சிறுமியை ரமேஷ் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: ஆபாச பேச்சு, நிர்வாண வீடியோ கால், உல்லாசம்: மன்மத லீலையில் திளைத்த வங்கி காசாளருக்கு வலைவீச்சு!