திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உரம் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பயணியர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கடுமையாக உயர்ந்துள்ள உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும், வேளாண் சட்டத்திருத்தங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘உர விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்’ - விவசாய சங்கங்கள் அறிவிப்பு