ETV Bharat / state

முதலமைச்சரைச் சந்திக்க விவசாயிகள் சென்னை பயணம் - Trichy farmers meeting with CM

திருச்சி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் 100 விவசாயிகள் இன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

trichy
farmers meeting with cm
author img

By

Published : Dec 12, 2019, 11:06 AM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் இன்று திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 6.40 மணிக்கு சென்னைக்கு செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றனர். செல்வதற்கு முன் ரயில் நிலையத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

  • 2016ஆம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இது வரை நஷ்ட ஈடு வழங்கவில்லை.
  • உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டும், தமிழக அரசு இதுவரை தள்ளுபடி செய்யாமல் உள்ளது.
  • மேற்குத்தொடர்ச்சி மலையில் பொழியும் மழைநீர் வீணாக கர்நாடகா செல்கிறது இவற்றை தமிழக விவசாயத்திற்கு திருப்பிவிட வேண்டும்.
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெண்கள் கருத்தரிப்பது குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இறக்குமதி செய்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர் இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • நதிகளை இணைக்கவேண்டும்.
    அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னைக்கு பயணம்

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக நாங்கள் செல்கிறோம். முதலமைச்சர் எங்களை சந்தித்தால் எங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்படி இல்லை என்றால் எங்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

இதையும் படிக்க: 'இந்தியாவை ஏளனமாகப் பார்த்த நாடு ரஷ்யா' - கலங்கிய மயில்சாமி அண்ணாதுரை

Intro:தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை புறப்பட்டு சென்றனர்.Body:திருச்சி:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை புறப்பட்டு சென்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். திருச்சியில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விவசாயிகள் புறப்பட்டுச் செல்வதற்கு முன் ரயில் நிலையத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், 2016ம் ஆண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இது வரை நஷ்ட ஈடு வழங்க வில்லை. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை தள்ளுபடி செய்யாமல் உள்ளது.
ஊட்டியில் பொழியும் மழை நீர் வீணாக கர்நாடகா செல்கிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் பொழியும் மழையும் வீணாக செல்கிறது. இவற்றை தமிழக விவசாயத்திற்கு திருப்பிவிட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பெண்கள் கருத்தரிப்பது குறைந்து வருகிறது. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை இறக்குமதி செய்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர். இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். நதிகளை இணைக்கவேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பதற்காக நாங்கள் செல்கிறோம். முதலமைச்சர் எங்களை சந்தித்தால் எங்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அப்படி இல்லை என்றால் எங்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.