ETV Bharat / state

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்தும் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 6:44 PM IST

Tamil Nadu Farmers Protest: காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவிக்கும் கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மின்சாரத்தை வருகின்ற 16 ஆம் தேதி நெய்வேலியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என திருச்சியில் விவசாய சங்கத்தினரின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வரும் 16ஆம் தேதி நெய்வேலியில் போராட்டம் விவசாயிகள் அறிவிப்பு

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(அக்.08) திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை திறந்து விடாததைக் கண்டித்து கர்நாடகாவுக்கு, நெய்வேலியிலிருந்து மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் ஏக்கருக்கு 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், தண்ணீர் தர விடவே இல்லை. கர்நாடகா அரசின் இந்த மறுப்பை, பிரதமர் மோடி கண்டிக்க தெம்பு இல்லாமல் இருக்கிறார்.

எனவே தமிழ் நாட்டில் நெய்வேலியிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் மின்சாரத்தை வரும் 16ஆம் தேதி தடுத்து நிறுத்துவதாக முடிவு செய்துள்ளோம். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 60ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை பெய்யும் போது, தண்ணீர் எல்லாம் கடலுக்கு வீணாக செல்வதை தடுக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.

எல்லா ஆறுகளிலும் தடுப்பணை கட்ட வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையை கேரளா, கர்நாடகாவுக்கு போகாமல் தமிழ்நாட்டுக்குத் திருப்பி விட வேண்டும். நீலகிரியில் உள்ள மோயார் ஆற்று தண்ணீர் கேரளாவுக்கும், கர்நாடகத்திற்கும் செல்கிறது. அந்த தண்ணீரை பவானி சாகர் அருகிலுள்ள புலிகள் காப்பகம் பகுதியில் திருப்பி விட வேண்டும்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு 5 ஆயிரத்து 400ம், ஒரு டன் கரும்புக்கு 8ஆயிர ரூபாயும் வழங்க வேண்டும். மேலும் ஆரூரான் சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலிலிருந்து எடுக்க வேண்டும்.

விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்திற்கு முன்பு சென்று போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் எங்களுக்கு நியாயம் வேண்டும். கர்நாடகா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு(contempt of court) வழக்கு போட வேண்டும். கர்நாடக அரசிடம், ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.