ETV Bharat / state

திருச்சி அருகே விவசாயி கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு - திருச்சி அருகே விவசாயி பலி

திருச்சி அருகே எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி மோட்டரைப் பழுதுபார்க்கச் சென்ற விவசாயி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

திருச்சி அருகே விவசாயி கிணற்றில் மூழ்கி  பலி..!

author img

By

Published : Jan 2, 2022, 2:24 PM IST

திருச்சி: உப்பிலியபுரம், காளிவட்டம் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் சந்திரசேகர் (35). விவசாயியான இவருக்கு வெங்கடாஜலபுரம் ஏரி அருகில் சொந்த தோட்டம் உள்ளது.

தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் பழுதாகியுள்ளது. அதை வெளியில் எடுப்பதற்காக, நாற்பதுக்கு நாற்பது அடி அகலமுள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 75 அடி தண்ணீர் இருந்த நிலையில் கிணற்றில் உள்ளே மூழ்கி மோட்டாரை வெளியே எடுப்பதற்காகக் கிணற்றில் குதித்துள்ளார்.

ஏற்கனவே பலமுறை இவ்வாறு கிணற்றில் குதித்து பழுதான மோட்டாரை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 2 முறை நீரில் மூழ்கி வெளியே வந்தவர், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கும் போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறி கிணற்றில் மூழ்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் சுமார் 10 தீயணைப்பு வீரர்கள் நேற்று (ஜன.1) மதியம் 4 மணி முதல் கிணற்றில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தேடியும் சந்திரசேகரை மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கிணற்றில் இருந்த நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றியும், 24 மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பின் விவசாயி சந்திரசேகரை சடலமாக மீட்டனர்.

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சந்திரசேகருக்கு மேகலா (28) என்ற மனைவியும், தர்ஷினி என்ற 4 வயது மகளும் உள்ளனர். மேகலா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையும் படிங்க:பாலியல் கொடுமைகளுக்கு எதிராக சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.