இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், 18.09.2019 அன்று டெல்லி உச்ச நீதிமன்றம் சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பு அணை கட்ட வேண்டும்.
காவிரியில் வெள்ளம் வரும்பொழுது வீணாக கடலில் கலக்கும் நீரை வெள்ளநீர் கால்வாய் வெட்டி வறண்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வருகின்ற அக்டோபர் 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல் போன்ற பல்வேறு வடிவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இந்த போராட்டத்தில் பெண்கள் தாலியை அறுத்து கையில் ஏந்திக்கொண்டு போராடுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி - சென்னை முக்கிய வீதியில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள்!