ETV Bharat / state

சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி! - எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.

CM EPS
author img

By

Published : Oct 29, 2019, 6:45 PM IST

Updated : Oct 29, 2019, 8:22 PM IST

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க நடைபெற்ற 80 மணி நேரப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. சுஜித்துக்காக நாடே அஞ்சலி செலுத்திவருகிறது.

இந்நிலையில், முதலமைச்ச எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் குழந்தை சுஜித்தின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின் சுஜித்தின் பெற்றோரைச் சந்தித்த முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "குழந்தை சுஜித்தை மீட்க அரசு இயந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. எல்லா வகையிலும் விடாமுயற்சி செய்தோம்; ஆனால் பலனளிக்கவில்லை. துணை முதலமைச்சரும் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்புப் பணிகள் குறித்து பார்வையிட்டார்.

சுஜித் மீட்புப்பணி குறித்து அரசை ஸ்டாலின் குறை கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இங்கு இருந்தவர்களுக்குத் தெரியும் மீட்புப் பணிகள் இரவு, பகல் பாராமல் எவ்வாறு நடைபெற்றது என்று. ஸ்டாலின் எப்போதும் அரசைக் குறைகூறுவதிலேயே இருக்கிறார். நாங்கள் மக்களுக்கு ஏற்படும் சிறு குறைகளைக் கூட சரி செய்யவே முயல்கிறோம்" என்றார்.

ஏன் ராணுவத்தை மீட்புப் பணியில் ஈடுபடுத்தவில்லை என்று ஸ்டாலின் கேட்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தேனியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்க திமுக அரசு ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் அதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க: ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? - சுஜித்துக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் கேள்வி!

Intro:Body:

TN CM EPS Visited  SUJITH home

Conclusion:
Last Updated : Oct 29, 2019, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.