ETV Bharat / state

திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! - ஜாபர்ஷா தெரு

ED Raid In Trichy Jewellery Shops: திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி நகைக்கடையில் அமலாக்கத்துறை சோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 11:08 AM IST

திருச்சி: சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று (நவ.20) திருச்சி ஜாபார்ஷா தெருவில் உள்ள 4 நகைக்கடைகளில் நள்ளிரவு முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சின்னக் கடை வீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு ஐந்து கார்களில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து, நேற்று நள்ளிரவு முதல் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஜாபர்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி, சூர்யா, விக்னேஷ் உள்ளிட்ட மூன்று கடைகள் மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கதுறை அதிகாரிகள் நகைக்கடைகளில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வரும் நிலையில், கடையின் வெளியில் துப்பாக்கி ஏந்திய 10 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட இந்த நான்கு கடைகளில் நடத்தப்படும் சோதனைக்கும், சென்னையில் நகைக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி, அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறையினருடன், தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: “உதய் மாமா…ஸ்டாலின் தாத்தா வாழ்த்து கூறினார்கள்” - தங்கம் வென்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மகள் நிலா ராஜா பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.