ETV Bharat / state

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீரங்கம்..! கண்கவர் கழுகுப் பார்வை காட்சிகள்..!

Srirangam Temple Decorated With Colored Lights: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கழுகுப் பார்வை காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.

Srirangam Temple Decorated With Colored Lights
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீரங்கம் - கண்கவர் கழுகு பார்வை காட்சிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 6:47 PM IST

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீரங்கம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் 108 வைண ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.‌ இந்த கோயிலுக்குத் திருச்சி மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோயிலின் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கருதப்படுகிறது. இத்தகைய பிரசித்திபெற்ற வைகுந்த ஏகாதசி திருவிழா திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகத்துடன் இன்று (டிச 12) தொடங்குகிறது.

இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது 13.12.2023 முதல் 22.12.2023 வரை பத்து திருவிழாவாகவும் மற்றும் 23.12.2023 ஆம் தேதி முதல் 02.01.2024 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் சிகர விழாவாக 23.12.2023 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குப் பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு வருகை புரிந்தனர். மேலும் இந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்புப் பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் பகல் பத்து மற்றும் இராப்பத்து விழாவின் போது திருச்சி மாநகர காவல்துறையினர் மட்டும் 380 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி வசதியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம் (நான் முகன் கோபுரம்) வெள்ளை கோபுரம் மற்றும் கோவில் உள் பகுதியில் இருக்கும் முக்கிய சன்னதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி விழாவால் ‌திருச்சி ஶ்ரீரங்கம் விழாக் கோலமாகக் காட்சியளிக்கிறது.

மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியாகிக் காண்போரை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமாவாசையை முன்னிட்டு சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.