ETV Bharat / state

"உங்க கட்சியினருக்கு அறிவு இருக்கா?" விதியை மீறி பேனர் வைத்த திமுகவினரை விளாசிய அறப்போர் இயக்கம்!

திருச்சி சாலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்த திமுகவினருக்கு அறப்போர் இயக்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி பிளக்ஸ் வைத்த திமுகவினர்.. அறப்போர் இயக்கம் கேள்வி

author img

By

Published : Dec 15, 2022, 12:53 PM IST

திருச்சி சாலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்த திமுகவினர்

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. இவர் டிசம்பர் 12 அன்று பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதற்காக திருச்சியைச் சேர்ந்த திமுகவினர் பலரும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை நகரின் பல இடங்களில் ஒட்டினர்.

குறிப்பாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் திருச்சி நம்பர் 1 ரவுண்டானாவில் பிளக்ஸ் பேனர்களை வைக்கப்பட்ய்டிருந்தது. அதிலும் இவை சாலையை மறித்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் பிறந்தநாள் விழா முடிந்து மூன்று நாட்கள் ஆகியும், நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சட்டத்தை அவமதித்து பேனர் வைத்திருக்கும் திமுகவினருக்கு அறிவு இருக்கா? இந்த சட்ட விரோத செயலை அனுமதித்து வேடிக்கை பார்க்கும் காவல் துறைக்கு கூச்சம் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

  • வாங்க கேட்கலாம்
    இப்படி சாலையில் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், நீதிமன்ற உத்தரவை அவமதித்து சட்ட விரோத பேனர்கள் வைக்கும் உங்க கட்சியினருக்கு #அறிவு_இருக்கா ? @KN_NEHRU
    இந்த சட்ட மீறலை அனுமதித்து வேடிக்கை பார்க்கும் காவலர்களே உங்களுக்கு கூச்சமே இல்லையா? @TrichyCityPolic pic.twitter.com/wjdtxk4FHF

    — Arappor Iyakkam (@Arappor) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் பிளக்ஸ் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வைக்கக்கூடாது என்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உதயநிதிக்கு அமைச்சர்; 'இனிதான் தெரிய வரும்..' - பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.