ETV Bharat / state

இலங்கையில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்க திமுக சதி - பாஜக குற்றச்சாட்டு - இலங்கையுடன் கை கோர்த்து சதி செய்யும் திமுக

திருச்சி: இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் விரட்டியடித்து பௌத்த பூமியாக மாற்ற திமுக சதி செய்கிறது என்று பாஜக மாநிலச் செயலாளர் ராகவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ragavan
ragavan
author img

By

Published : Dec 20, 2019, 4:03 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும் திமுகவின் நிலைப்பாட்டை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

இதனைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் ராகவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தமிழ்நாட்டில் திமுக மக்களை மத ரீதியாக இந்தியர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பிரதமரும் உள் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், அகதிகளாக வந்தவர்களைத்தான் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தும்.

இந்த ஒப்பந்தம் ஏற்கனவே லியாகத் அலியும் ஜவஹர்லால் நேருவும் செய்துகொண்டது. இந்தியாவின் இந்த வாக்குறுதியைதான் மோடி தற்போது நிறைவேற்றியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்பட்டன. அவர்களை மீண்டும் கவுரவமாக இலங்கையில் குடியமர்த்ததான் மோடி திட்டங்களை மேற்கொண்டுவருகிறார்.

இதற்காகத்தான் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்களது தாய் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால், இலங்கையில் மீதமுள்ள தமிழர்களும் ராஜபக்ச அரசால் விரட்டியடிக்கப்படுவார்கள். ராஜபக்சவுடன் திமுக கைகோத்துக் கொண்டு, இலங்கையை முழு பௌத்த பூமியாக மாற்றும் சதிக்கு துணைபோகிறது.

மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதில் மாநில முதலமைச்சர்கள் தலையிடவோ, தடுத்து நிறுத்தவோ அதிகாரம் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு!

Intro:இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் விரட்டியடிக்க திமுக சதி செய்கிறது என்று பாஜக மாநில செயலாளர் ராகவன் குற்றம் சாட்டியுள்ளார்.Body:

திருச்சி;
இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் விரட்டியடிக்க திமுக சதி செய்கிறது என்று பாஜக மாநில செயலாளர் ராகவன் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தும், திமுக.வின் நிலைப்பாட்டை கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மதரீதியாக நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில செயலாளர் ராகவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை கண்டித்தும், தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக மக்களை மத ரீதியாக திசைதிருப்ப முயற்சிக்கிறது. இந்தியர்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இச்சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அகதிகளாக வந்தவர்களை தான் இந்த சட்டம் கட்டுப்படுத்தும். இந்த மூன்று நாடுகளும் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. அதனால் அங்கு இஸ்லாமியர்களுக்கு துன்புறுத்தல் ஏற்படாது. அங்கு துன்புறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ள சிறுபான்மை இன மக்களை தான் தான் இந்தியாவில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே லியாகத் அலியும் ஜவகர்லால் நேருவும் செய்து கொண்டது. இந்தியாவின் இந்த வாக்குறுதியை தான் மோடி தற்போது நிறைவேற்றியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. அவர்களை மீண்டும் கவுரவமாக இலங்கையில் குடியமர்த்த தான் மோடி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இதற்காகத்தான் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப தான் விரும்புகிறார்கள். இதற்கான வாய்ப்பை தான் மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால், இலங்கையில் மீதமுள்ள தமிழர்களும் ராஜபக்சே அரசால் விரட்டி அடிக்கப்படுவார்கள். இதற்கு தான் திமுக சதி செய்கிறது. ராஜபக்சேவுடன் திமுக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறது. மீதமுள்ள தமிழர்களையும் விரட்டி அடித்துவிட்டு இலங்கையை முழு பவுத்த பூமியாக மாற்றும் சதிக்கு திமுக துணை போகிறது. மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இதில் மாநில முதல்வர்கள் தலையிடவோ, தடுத்து நிறுத்தவும் அதிகாரமும் கிடையாது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.