ETV Bharat / state

மணப்பாறையில் மதுபாட்டில்கள் கடத்தல்: திமுக பிரமுகர் கைது - DMK cadre arrested for smuggling liquor

திருச்சி: மணப்பாறையில் மதுபாட்டில்கள் கடத்திய திமுக பிரமுகர் கைதுசெய்யப்பட்டு அவரிடமிருந்து மதுபாட்டில்கள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபாட்டில்கள் கடத்திய திமுக பிரமுகர் கைது

author img

By

Published : Jun 15, 2021, 3:50 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உள்கோட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், பழச்சாறு ஊறல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அழித்துவருகின்றனர்.

இந்நிலையில் முசிறி மதுவிலக்குப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று மணப்பாறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வளநாடு காவல் சரகத்திற்குள்பட்ட தேனூர்-ஊனையூர் சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அதில் மூன்று அட்டை பெட்டிகளில் 144 வெளிமாநில மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், கொடும்பப்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ராமு (திமுக மருங்காபுரி ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர்) என்பவரை கைதுசெய்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.