அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் உடன் வந்திருந்தனர்.