இந்த ஆலோசனை கூட்டத்தில் கஞ்சா தொடர் நடவடிக்கைகள், போக்சோ சட்டம், போதைப் பொருட்கள் கடத்தல் செய்து விற்பனை செய்பவர்கள் மீதான நடவடிக்கை, தொடர்ந்து பொருள் கடத்துவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை, பொதுமக்கள் புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், காவல்துறை குறைதீர்ப்பு பல்வேறு அம்சங்கள் குறித்து டிஜிபி ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மண்டல ஐஜிக்கள், துறை முகாம்கள் உள்ளிட்ட ஐஜிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தைத் டிஜிபி சைலேந்திரபாபு நாளை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டிஜிபியின் கூட்டம் மலைக்கோட்டை மாநகரிலா அல்லது சென்னையிலா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
இதையும் படிங்க: காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்த டிஜிபி தலைமையில் ஆய்வு கூட்டம்