ETV Bharat / state

உள்ளாடையில் மறைத்து கடத்தப்பட இருந்த அமெரிக்க டாலர்கள் பறிமுதல் - Customs officials seized US dollars

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து துபாய்க்கு கடத்தப்பட இருந்த அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Customs officials seized US dollars hidden in inner wear
உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்திய அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
author img

By

Published : Jan 28, 2023, 11:22 AM IST

திருச்சி விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகை கடத்தல் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது கைது நடவடிக்கைகளும், பறிமுதலும் நடக்கின்றன. அந்த வகையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று (ஜனவரி 28) அதிகாலை திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். அப்போது விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடையே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பயணியின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்து 5 ஆயிரத்து 500) அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பயணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்.. பஞ்சாயத்து துறை இயக்குநர் உத்தரவுக்கு இடைக்கால தடை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.