கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனடிப்படையில் மத்திய அரசு உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதியளித்தது. அதன்படி திருச்சியிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அப்படி வரும் விமானப் பயணிகள் தீவிரப் பரிதோதனைக்கு உட்படுத்தப்படுகிறனர். கரோனா அறிகுறிகளிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக மருத்துவ குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களூருவிலிருந்து நேற்றிரவு இண்டிகோ விமானம் திருச்சி வந்தடைந்து.
அதில் வந்த பயணிகளை அரசு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அவரது மனைவி சுகாசினி ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால் அவர்கள் மீது நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு துணை வட்டாட்சியர் சற்குணம், விமான நிலையக் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து முகுந்தராஜ் - சுகாசினி தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயணிகள் பற்றாக்குறை: சென்னையில் இன்று 38 விமானங்கள் மட்டும் இயக்கம்