ETV Bharat / state

5 ரூபாய் சாப்பாடு: பசியாற்றுவதை விட வேறு கொடை உண்டா? - குறைந்த விலைக்கு உணவு வழங்கும் தம்பதி

திருச்சி: ஒரு வேளை உணவுக்காகப் போராடும் ஏழை எளிய மக்களுக்காக கணவரின் வருமானத்தை வைத்து பெண் ஒருவர் குறைந்த விலையில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.

பசியாற்றும் அன்னப்பூரணி
பசியாற்றும் அன்னப்பூரணி
author img

By

Published : Jan 15, 2021, 12:14 PM IST

Updated : Jan 17, 2021, 12:14 PM IST

திருச்சி மாவட்டம், முதலியார்சத்திரம் பகுதியில் வசிப்பவர்கள் சந்திரசேகர் - புஷ்பராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தினமும் காலை, மதியம் என இரு வேளைகளிலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அதிலும் காலை வேளையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 ரூபாய்க்கு இட்லியும், 2.50 ரூபாய்க்கு பொங்கலும் உணவாக வழங்குகின்றனர். இதேபோல் விடுதியில் தங்கிப்படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இட்லி 2 ரூபாய்க்கும், பொங்கல் 2.50 ரூபாய்க்கும் வழங்கி வருகின்றனர். மேலும், கூலித்தொழிலாளிகளுக்கு 3 ரூபாய் விலையில் இட்லியும், 5 ரூபாய் விலையில் பொங்கலும் வழங்குகின்றனர். ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.

இதேபோல் நண்பகல் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம், புதினா சாதம், கொத்தமல்லி சாதம், வெஜிடெபிள் பிரியாணி, காளான் சாதம், நெல்லிக்காய் சாதம் உள்ளிட்ட 30 வகையான சாதங்களில் தினமும் சுழற்சி முறையில் 6 வகையான சாதங்களைத் தயார் செய்து 5 ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர்.

இதிலும் விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு சலுகை விலையாக 2.50 ரூபாய்க்கும், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவற்றவர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வருகின்றனர். இவர்களின் இந்த சேவை காஜாமலை பகுதியில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், அருகிலுள்ள கல்லூரிகளில் தங்கிப் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இது குறித்து 5 ரூபாய் உணவக உரிமையாளர் புஷ்பராணி கூறுகையில், 'நாங்கள் கடந்த ஒரு வருடமாக இந்த சேவையை செய்து வருகிறோம். ஆரம்பத்தில் 20 ரூபாய்க்கு உணவு விற்பனை செய்தோம். ஆனால், இதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் தினமும் மீதமிருந்த உணவை கீழே கொட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அப்போது, அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் சிலர், எங்களுக்குப் பாதி விலையில் உணவை வழங்கினால், நாங்கள் வாங்கிக் கொள்வோம் எனத் தெரிவித்தனர்.

இதை எனது கணவரிடம் தெரிவித்தேன். உடனடியாக, அவர் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என நோட்டீஸ் அடித்துவிட்டார். அதிலும் விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாதி விலையிலும், ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தோம். இந்தத் தொழிலில் எங்களுக்குப் பெரிய அளவில் லாபம் ஏதும் இல்லை. எனது கணவர் செய்யும் வெல்டிங் தொழிலில் கிடைக்கும் லாபத்தை கொண்டுதான் நாங்கள் இதனை செய்து வருகிறோம்.

ஆனால், சிலரின் உதவியோடுதான் நாங்கள் இதனை செய்து வருவதாக வெளியில் பேசிக் கொள்கின்றனர். ஆனால், அப்படி யாரும் எங்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. எனது கணவரின் தொழிலில் கிடைக்கும் லாபத்தை மட்டுமே முதலீடாக வைத்து இதனை நடத்தி வருகிறோம். ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்களுக்குப் பசியாற உணவு வழங்குவதில் எனது கணவருக்கும், எனக்கும் ஒரு சந்தோஷம்' எனப் பூரிப்போடு தெரிவித்தார்.

பசியாற்றும் புஷ்பம்மா

இது குறித்து கல்லூரி மாணவர் கார்த்திக் கூறுகையில், 'நாங்கள் வெளியூரிலிருந்து இங்கு வந்து தங்கிப் படித்து வருகிறோம். நாங்கள் வெளியே சென்று ஒருவேளை உணவருந்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 100 ரூபாய்வரை செலவாகிறது. ஆனால், இந்தக் கடையில் உண்ணும்போது எங்களுக்கு அதிகபட்சமாக 20 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. இந்தக் கடை என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது' என்றார்.

பசியால் வாடும் ஒருவருக்கு ஒருவேளை உணவு கொடுத்து பசியாற்றுவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியாது. இத்தகைய சேவையைத் தினந்தோறும் தங்களது தொழிலாக செய்து வரும் தம்பதியை அப்பகுதி மக்கள், கல்லூரி மாணவர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பசி பொறுக்காமல் கீரை விற்கச் செல்கிறோம்... கலங்கும் சமையல் தொழிலாளிகள்!

Last Updated : Jan 17, 2021, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.