ETV Bharat / state

கள்ள துப்பாக்கி தோட்டா பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு - தந்தை தலைமறைவு - trichy crime news

மணப்பாறை அருகே கள்ள துப்பாக்கியின் தோட்டா பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலசுப்பிரமணி
பாலசுப்பிரமணி
author img

By

Published : Oct 28, 2021, 5:26 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகன் பாலசுப்பிரமணி (20) நேற்றிரவு ஊருக்கு அருகாமையில் உள்ள புளியந்தோப்பில் கழுத்தில் நாட்டுத் துப்பாக்கியின் தோட்டா பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காவல் துறையினர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்து கிடந்த இடத்தில் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அது உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கி எனத் தெரியவந்தது.

நேற்றிரவு (அக்.27 பாலசுப்பிரமணியனுக்கும், தந்தை அழகருக்கும் சண்டை நடந்ததால் இது கொலையா? இருக்குமா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள பாலசுப்பிரமணியனின் தந்தை அழகரை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.