உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இதுவரை 50 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சில தினங்களுக்கு முன்பு 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த, 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் மொத்தம் 21 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் தற்போது ஆறு பேர் வீடு திரும்பி உள்ளதால், மீதமுள்ள 15 பேருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆயுதப்படைக் காவலர்கள் குடியிருப்புப் பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு