நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு முகக்கவசம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மணப்பாறையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகர் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், முறுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு முகக்கவசம் வழங்கினார்.
நகராட்சி முழுவதும் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குக் கூடியிருந்த பயணிகள், தங்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: முகக்கவசம் வழங்கிய தமாகாவினர்