தமிழ்நாட்டில் ஐந்தாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் ஆயிரத்து 384 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், திருச்சியில் இன்று ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 93 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய எண்ணிக்கையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.
மொத்த எண்ணிக்கையான 100 பேரில் 76 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 23 பேர் மட்டுமே திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் ஒரு மூதாட்டி மட்டுமே கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: மருத்துவமனைகளில் விஜயபாஸ்கர் ஆய்வு