தமிழ்நாட்டில் இன்று(செப்.26) ஒரே நாளில் 5 ஆயிரத்து 647 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 ஆகும்.
திருச்சி மாவட்டத்தில் இன்று(செப்.26) ஒரேநாளில் 96 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 168ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 9,240 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 785 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சி,தஞ்சையில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தொற்று